சவூதி எஜமானர் எனது மனைவியை பணத்திற்காக விற்பனை செய்கின்றார்-விவசாயி
சவூதி அரேபிய எஜமானர் எனது மனைவியை பணத்திற்காக விற்பனை செய்து வருவதாக மாத்தளையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
மாத்தளை ஹதுன்கமுவ பொத்தப்பிட்டியைச் சேர்ந்தவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்னதாக சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக சென்ற எனது மனைவியை, வீட்டு எஜாமானர் பணத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் எனது மனைவி நோய் வாய்ப்பட்டுள்ளார். துன்பங்களை அனுபவித்து வரும் மனைவியை மீள நாட்டுக்கு அழைத்து வர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த போலியான ஓர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் ஊடாக மனைவி வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் மனைவி வெளிநாட்டுக்கு சென்று சில காலம் கடந்த பின்னரே எனக்குத் தெரியும்.
மனைவியை மீள அழைப்பதற்கு சவூதி அரேபிய வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்திற்கு நான்கரை லட்ச ரூபா வழங்க வேண்டியுள்ளது.
ஏழை விவசாயியான எனக்கு இவ்வாறு பணம் செலுத்த முடியாது. வீடு ஒன்றை கட்டும் நோக்கிலேயே மனைவி வெளிநாட்டுக்குச் சென்றார் என குறித்த விவசாயி தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக