புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் தனது நடத்தையின் மீது சந்தேகப்பட்ட கணவனை மனைவி ஒருவர் உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.


மகாராஷ்டிர மாநிலம் புனே அருகிலிருக்கும் கட்கி பகுதியை சேர்ந்தவர் சரோஜா தேவி (45), இவரது கணவர் சஷிகாந்த் (56).

இரண்டு நாட்களுக்கு முன்பு குடி போதையில் வீடு திரும்பிய சஷிகாந்திற்கும் சரோஜா தேவிக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் உச்சகட்ட நிலையை அடைந்தபோது சரோஜா தேவியின் நடத்தையை பற்றி சஷிகாந்த் தவறாக பேசத் தொடங்கியுள்ளார்.

இதற்கு சரோஜா தேவி எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் சஷிகாந்த் தொடர்ந்து அவரை புண்படுத்தும் படி பேசினார்.

இதனால் கடும் கோபமுற்ற சரோஜா தேவி வீட்டில் இருந்த உருட்டு கட்டையை வைத்து அவரது கணவரை கடுமையாக தாக்கி வீட்டிற்கு வெளியே தள்ளினார்.

பலத்த காயமடைந்த சஷிகாந்த் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் சரோஜா தேவி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top