புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வெனிசுலா நாட்டில் காதலி உதவியுடன் சூட்கேசுக்குள் ஒளிந்து சிறையிலிருந்து தப்ப
முயன்ற கொலைக்குற்றவாளி பிடிபட்டார். தென்னமெரிக்க நாடான, வெனிசுலாவை
சேர்ந்தவர் கேவின்சன் கார்சியா. கொலைக்குற்றத்துக்காக தலைநகர் காரகாசில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையிலிருந்து தப்ப இவர் நூதன திட்டம் தீட்டினார். அளவில் பெரிதான இழுவை சூட்கேசை, சிறை கட்டிடத்துக்கு கொண்டு வர தன் காதலிக்கு தகவல் அனுப்பினார். தன் திட்டத்தை நிறைவேற்ற கைதிகளுக்கு, பணம் கொடுத்தார்.

சிறை கட்டிடத்துக்கு சூட்கேசுடன் வந்த பெண்ணை அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர். சிறைக்குள் இருந்த கார்சியா, சூட்கேசுக்குள் கையையும் காலையும் மடக்கி படுத்துக்கொண்டார்.

சூட்கேசுடன் வெளியில் வந்த அவரது காதலியை கவனித்த சிறை அதிகாரிகள் அவர் மிகுந்த சிரமத்துடன் அதை இழுத்து வந்ததை கண்டதும் சந்தேகம் அடைந்தனர்.

சூட்கேசை திறந்து பார்த்தபோது, அதில் கார்சியா ஒளிந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீண்டும், சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்துக்கு பின்பு சூட்கேஸ் மற்றும் பெரிய பைகளுடன் சிறைக்கு வர பார்வையாளர்களுக்கு, சிறை நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top