பாம்புப் பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரட்னவுக்கு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
சந்தேக நபரான நிரோஷா விமலரட்ன அல்லது டிலானி என அழைக்கப்படும் இந்தப் பெண் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகாமையினாலேயே நீதிமன்றம் பிடியாணை விடுத்துள்ளது.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இரவு களியாட்ட விடுதியில் நடன மங்கையாக பணியாற்றி வந்த நிலையில் பாம்பொன்றை உடன் வைத்திருந்த காரணத்தினால் கடந்த வருடம் ஒக்ஸ்ட் மாதம் 28ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து இந்த வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக