விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில், மகத் ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் மறுத்துவிட்டார்.
துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் ஜோடி போட்டவர் நடிகை காஜல் அகர்வால். இப்படம் சூப்பர் ஹிட்டாகவே இவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் விஜய் ஜோடியாகியுள்ளார் காஜல். இவர்களுடன் மலையாள சூப்பர் கதாநாயகன் மோகன்லாலும் நடிக்கிறார்.
இதன் மற்றுமொரு கதாபாத்திரத்தில் மங்காத்தா மகத் நடிக்கிறார். ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் இப்படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாரிக்கிறது.
இப்படத்தில் மகத் ஜோடியாக நடிக்க காஜலின் தங்கை நிஷா அகர்வாலை கேட்டுள்ளனர். ஆனால் நிஷா மறுப்பதற்கு முன்பே என் தங்கை சின்ன நடிகருடன் எல்லாம் நடிக்கமாட்டார், நடித்தால் பெரிய நடிகர்களுடன் மட்டும் தான் நடிப்பார் என்று கூறிவிட்டாராம்.
இத்தனைக்கு நிஷா அகர்வால் தமிழில் நடித்தது இஷ்டம் எனும் ஒரு படம் தான். அந்தபடமும் சரியாக போகவில்லை, அப்படி இருக்கையில் தன் தங்கைக்கு வந்த வாய்ப்பை அவர் மறுத்துள்ளார்.
ஒருவேளை அக்காவும், தங்கையும் ஒரே படத்தில் நடித்தால் சரிப்பட்டு வராது என்று நினைத்து வேண்டாம் என்று கூறியிருப்பாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக