புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ். சாவகச்சேரி, மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த கோவில் பூசகர் ஒருவர் தனது உறவுக்கார சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சாவகச்சேரி பொலிஸாரினால் சந்தேகநபர் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டுவில் கோவில் ஒன்றில் பூசகராக இருக்கும் 27 வயதுடைய இளைஞர் ஒருவரே தனது தங்கை முறையான 16 வயதுடைய சிறுமியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

குறித்த சிறுமியை கோவில் பின்வளவில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top