புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனையில் புதன்கிழமை மாலை காணிப்பிரச்சினை காரணமாக ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதுடன், ஒருவர் நஞ்சருந்தியதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார்
தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், கட்டுத்துவக்குச் சூட்டுக்கிலக்கான தாளங்குடாவைச் சேர்ந்த சோமசுந்தரம் கனகரெட்ணம் என்பவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், இவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்த பன்சேனையைச் சேர்ந்த கேதாரம் என்பவர் நஞ்சருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவருக்குமிடையில் நடைபெற்ற காணிப் பிரச்சினையே இந்த துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top