கணவன் தொடர்ச்சியாக மது அருந்தியமையின் காரணமாக அவமானம், கவலை அடைந்த ஆசிரியை ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கம்பொல, புசெல்ல, நவகடதொர என்னும் இடத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கணவனது செயல் தாக்கமுடியாது தற்கொலை செய்து கொண்ட பெண் நவகடதொர பிரதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியை என தெரியவந்துள்ளது.
இவ் ஆசிரியை நேற்று (15) மாலை வேளையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மனைவியின் உயிரிழப்பு காரணமாக மன உலைச்சலுக்கு உள்ளான கணவன் இன்று (16) காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை கர்ப்பிணி என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக