மோதரை, பன்சல வீதி பொது மலசல கூடத்திற்கு அருகில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் ஆண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
மோதரை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நேற்று (15) மாலை மீட்கப்பட்ட குறித்த ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார்.
மோதரை, ரெட்பனாவத்த பகுதியைச் சேர்ந்த 47 வயதான மணிவண்ணன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருடைய உடலில் காணப்பட்ட வெட்டுக் காயத்தை அடுத்து மோதரை பொலிஸார் நடத்திய விசாரனைகளின் போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதானவர் வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பில் முடிவடைந்தமையினால் மரணமடைந்த நபர் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக