சின்னாளப்பட்டி அருகே குடும்ப பிரச்னையால் மனமுடைந்து 2 குழந்தைகளுக்கு ஆசிட்டை கொடுத்து கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டார்.
போலீசாருக்கு தெரியாமல் 3 பேரின் உடல்க ளையும் உறவினர்கள் எரித்ததால் பதற்றம் நிலவுகிறது.
திண்டுக¢கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே ஏ.ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி ஜோதி (28). இவர்களுக்கு புவனேஸ்வரி (6), கவுரிபாலா (2) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
சின்னாளபட்டியில் உள்ள சாயப்பட்டறையில் தம்பதி வேலை செய்து வந்தனர். குடும்ப பிரச்னையால் மனமுடைந்த ஜோதி தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக சாயப்பட்டறையில் பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து வீடு திரும்பினார்.
குளிர்பானத்தில் கலந்து புவனேஸ்வரி மற்றும் கவுரிபாலாவுக¢கு கொடுத்தார். பின்னர் தானும் ஆசிட்டை குடித்தார். நீண்ட நேரமாக வீடு பூட்டி கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர்.
வீட்டை திறந்து பார்த்தபோது குழந்தை புவனேஸ்வரி இறந்து கிடந்தாள். ஜோதி மற்றும் கவுரி பாலா உயிருக¢கு போராடிக¢கொண்டியிருந்தனர். இருவரையும் சின்னாளபட்டி தனியார் மருத்துவமனைக¢கு உறவினர்கள் கொண்டு சென்றனர். வழியில் கவுரிபாலா இறந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜோதியும் இறந்தார்.
இதையடுத்து உடல்களை போலீசாருக்கு தெரியாமல் அம்பாத்துரை,நடுப்பட்டி சாலையில் உள்ள சுடுகாட்டில் வைத்து உறவினர்கள் எரிக¢க முயன்றனர். தகவலறிந்த சின்னாளபட்டி போலீசார் எரிக்கவிடாமல் தடுத்தனர்.
ஆனால் அவர்களை விரட்டியடித்த உறவினர்கள் சடலங்களுக்கு தீ வைத்தனர். இதனால் போலீசாரால் 3 பேரின் உடல்களை கைப்பற்ற முடியவில்லை. தகவலறிந்து சென்ற செய்தியாளர்களையும் புகைப்படக்காரர்களையும் விரட்டினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அம்பாத்துரை விஏஓ (பொ) கரியன் புகாரின்பேரில் தற்கொலைக்கான சாட்சியங்கள் மற்றும் தடயங்களை மறைத்தது, போலீசாருக¢கு தெரியாமல் உடல்களை எரித்தது போன்ற குற்றங்களுக்காக ஜோதியின் கணவர் பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் மீது போலீசார் வழககுப்பதிவு செய்துள்ளனர்
0 கருத்து:
கருத்துரையிடுக