கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே முன்னாள் காதலனுடன் வசித்து வந்த வடமாநில இளம்பெண் தாக்கப்பட்டதாக பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த விபரம் வருமாறு, பீகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்தவர் பிரகாஷ்குமார். இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த புஷ்பகுமாரிக்கும் 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு முன்பே இதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் குமார் என்ற இளைஞருடன் புஷ்பகுமாரி பழகிவந்துள்ளார். இந்நிலையில், தனக்கு விருப்பம் இல்லாமல் பிரகாஷ்குமாருக்கு திருமணம் செய்து வைத்துவிட்ட பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு, தனது கணவரையும் உதறிவிட்டுவிட்டு பழைய காதலன் ஜெயபிரகாஸ்குமாருடன் கோவை அருகே உள்ள வெற்றிலைக் காளிபாளையத்திற்கு வந்து அங்கு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இதனையறிந்த, புஷ்பகுமாரியின் தந்தை சாய்ராம், பிகார் மாநிலத்திலிருந்து தனது உறவினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை வெற்றிலைக் காளிபாளையம் வந்துள்ளனர். கணவருடன் வாழாமல் ஓடிவந்துவிட்ட மகளை திட்டியதாகத் தெரிகிறது.
அப்போது, புஷ்பகுமாரிக்கும், சாய்ராமுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திக்கொண்டனர். ஒரு கட்டத்தில், புஷ்பகுமாரியின் மூக்கை சாய்ராம் அறுத்து விட்டாராம். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் கும்பல் தப்பிவிட்டது.
இது குறித்து புஷ்பகுமாரி கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். பீகார் மாநிலத்துக்கு போய்விட்ட சாய்ராமை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக