ராமநாதபுரம் அருகே இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒருவர் உயிர் பிழைத்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சிருங்கேரி சங்கரமடம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரவி(45). இவர் கடந்த 13 ஆம் தேதி இதயக் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இந்நிலையில் இதயக் கோளாறு காரணமாக 16 ஆம் தேதி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.
இதை அடுத்து அவரை வீட்டுக்குக் கொண்டு வந்தனர். இறுதிச் சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பந்தல் கட்டி உறவினர்களும் கூடிவிட்டனர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென அவரது கால் விரல் அசைந்துள்ளது. பின்னர் காலில் சிறிதளவு இயக்கம் இருந்துள்ளது. இதை கவனித்த சிலர், அவரை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் அங்கிருந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது, அவர் உயிருடன் இருப்பதும், அவரது இதயம் பலவீனம் அடைந்திருப்பதும் தெரியவந்தது. இதை அடுத்து, அவர் இதய நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை உறவினர்களுடன் உற்சாகமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாராம். இந்தச் செய்தி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்து:
கருத்துரையிடுக