புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குளிர் பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம் கோடிக்கணக்கான லீற்றர் கோலா (cola)பானங்கள் ஆண்டு தோறும் பருகப்படுகிறன. இது போன்ற பானங்கள் இன்றி உயிர் வாழ முடியாது என்றே கூற பலர் நினைக்கின்றனர்.பட்டி தொட்டியொங்கும் இப் பானங்கள் கொட்டி கிடைக்கின்றன. குளிர் பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல் கர்ப்பிணிகள் குழந்தைகள் நீரிழிவு நோயாளிகள் இரத்த அழுத்தம் உள்ளோர் கூட இவற்றை பருகின்றனர்.


இந்தப் பானங்களில் அப்படி என்ன உள்ளது என்ன ஆபத்து?

பாஸ்பாரிக் அமிலம் சீனி காபீன் நிறமி மற்றும் வாசனை ஊட்டி ஆகியவை இதில்
உள்ளன துருவை கரைத்தல்ஆணியை கரைத்தல் சுண்ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்பட செய்யும் பாஸ்பாரிக் அமிலம் இதில் 55 சதவீதம் உள்ளது இதனால் கோலாவில் அமிலத்தன்மை 2.6.பி.எச். அளவு எகிறுகிறது உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும் இதே அளவு அமிலதன்மை கொண்டது கோலாவில் சீனி வாசனை ஊட்டியும் சேர்க்கப்படுவதால் வினிகரை விட சுவையாக உள்ளது.


வினிகரைகுடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

இப்பானங்களை குடித்தால் பற்கள் பாதிப்படையும் பல்லில் குழி விழும் நம் பல்லை இது போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு வைத்தால் பல் மிருதுவாகி விடும் 250 மி.லி.பானத்தில் 150  கலோரிச் சத்து உள்ளது உடலுக்குத் தேவையான சத்துக்களோ விற்றமினோ தாதுப் பொருட்களோ இதில் இல்லை .இதில் உள்ள சீனி உடனடியாக ரத்தத்தில் கலந்து கொழுப்பாக மாறுகிறது .தொடர்ந்து பருகினால் உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது .குழந்தைகள் இந்தபானத்திற்கு வெகு சீக்கிரகம் அடிமையாகி விடுகின்றானர் சீனியும் காபீனும் இதில் இருப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது .ஒரு குவளை காபியில் 70-125 உம் தேநீரில் 15--75உம் கோகோவில் 10-17 மற்றும் ஒரு சொக்லேட் கட்டியில் 60-70மி.கி. அளவு உள்ளது .இதில் உள்ள அமிலமும் காபீனும் வாயிற்றில் அல்சரை அதிகரிக்கின்றன .உடலிலிருந்து சுண்ணாம்பு சத்து வெளியேற காபீன் காரணமாக அமைகின்றது.

காபீனுடன் குளிர் பானங்களில் உள்ள பொஸ்பரசும் சேர்ந்து எலும்பு தேய்மானத்தை உருவாக்கி விடுகின்றன. இதனால் எலும்பு தேய்மானத்தை உருவாக்கி விடுகின்றன .இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டு விடுகிறது கர்பீன் இதய செயல்பாட்டையும் ம்த்திய நரம்பு மண்டலத்தையும் ஊக்கிவிக்கின்றது இதனால் அதிக இதய துடிப்புடன் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள் தூங்கினாலும் அடிக்கடி விழித்து கொள்வர்கள் இதனால் பெற்றோர் திண்டாடும் நிலை ஏற்படும் காபீன் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்யும் எனவே எப்போதும் படபடப்பாய் இருப்பவர்கள் காபீன் அடங்கிய பானங்கனள தவிர்க்கவேண்டும் கர்ப்பிணிகள் நாள் ஒன்றுக்கு 300மி.கி அளவு காபீன் பருகலாம் அதற்கு மேல் பருகக்கூடாது இந்த பானங்களை குடிப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு எந்தப்பலனும் ஏற்படாது பணம் செலவழிவது மட்டுமே மிஞ்சும்!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top