புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



உலகளாவிய ரீதியில் கடந்த வருடம் மட்டும் 2 மில்லியன் பெண்கள் மார்பு அல்லது பிறப்புறுப்புப்புற்று நோய்க்குச்சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர்.குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் 50 வயதிற்குக் குறைந்த பெண்களில் இந்த நோயின் அளவு உயர்ந்துள்ளது.பணக்கார நாடுகளிலுள்ளவர்கள் ஓரளவு தேறிவருவதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இந்த ஆய்வு வளர்முக நாடுகளில் புற்றுநோயைத் தடுப்பதற்கான செயல்முறைகளைச் செய்யுமாறு உலகநாடுகளைத் தூண்டியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

2010 இல் மட்டும் 2 மில்லியன் புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் 625,000 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.உலகெங்கிலும் உள்ள நாடுகளில் ஒவ்வொரு வருடமும் 3 வீதம் மார்புப் புற்றுநோயும் 2 வீதம் இறப்புகளும் அதிகரித்துள்ன.


இது வயோதிபமடையும் வீதம் அதிகரித்துள்ளதாலும் வேறு சில காரணிகளாலுந்தான் ஏற்பட்டுள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இவற்றில் சில புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும் என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top