இந்திய சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்ற வரலாற்று நாயகனான திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார் கமல் ஹாஸன்.18-ம் நூற்றாண்டில் இந்தியாவின் முக்கிய சமஸ்தானமாகத் திகழ்ந்த மைசூரின் மன்னராகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான். போர்க் கலை, ஆட்சித் திறன், பொருளியல் நிர்வாகம் என பலவற்றில் மிகச் சிறந்தவராகத் திகழ்ந்தவர் திப்புசுல்தான் .
இவர் பிரெஞ்சுப் பேரரசன் நெப்போலியனின் இந்திய பிரதிநிதியாகக் கருதப்பட்டவர். திப்பு சுல்தானின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய படம் ஒன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகிறது. இந்தப் படத்தில் திப்பு சுல்தானாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் கமல் ஹாஸன். ஜான் பால் இந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதுகிறார். வயலார் மாதவன் இயக்குகிறார்.´´திப்புவும் உன்னியர்ச்சயும்' என இந்தப் படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.
பழஸ்ஸி ராஜா படத்தைத் தயாரித்த கோகுலம் கோபாலன், இந்தப் படத்தை பிரமாண்ட செலவில் தயாரிக்கிறார். உன்னியர்ச்சா என்பது ராணியின் பெயர். வடக்கு மலபார் பகுதியை ஆட்சி செலுத்திய உன்னியர்ச்சா பெரிய வீராங்கனையாவார். திப்பு மற்றும் உன்னியர்ச்சா சம்பந்தப்பட்ட பகுதியை மட்டும் படமாக்குகிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக