புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு





குறிப்பாக வேலைப்பளு, குடும்பச் சுமை, வயது கோளாறு போன்ற பல்வேறு காரணங்களால் உண்டாகும் மனஅழுத்தம் இரவு நேரத்தில் தூக்கமின்மையை உண்டாக்குகிறது, எனவே நிம்மதியான உறக்கத்திற்கு மனஅழுத்தத்தை குறைக்கத் தேவையான பின்வரும் குறிப்புகளை பின்பற்றலாம்.

* இரவு நேரங்களில் போதுமான அளவு தூக்கமே மன அழுத்தத்திலிருந்து பெரும்பான்மையான விடுதலை அளிக்கிறது, படுக்கைக்கு செல்லும் முன்பு எல்லா வகையான ரச்சனைகளையும் மறந்து அமைதியான மன நிலையில் உறங்கச்செல்ல வேண்டும்.

* உறங்க செல்லும் முன்பு அன்றைய தினத்தில் சந்தித்த அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்முன் கொண்டு வந்த பிறகு ஓய்வான மனநிலையில் உறங்கச் செல்ல வேண்டும்.

* அளவுக்கு மீறிய தூக்கம் ஆபத்தானது. ஏனென்றால் அதுவே பழக்கமான ஒன்றாக மாறி அன்றாட வேலைகளை பாதிக்க நேரிடும். எனவே அளவான தூக்கமே போதுமானது.

* உடற்பயிற்சி ஒரு சிறந்த பழக்கம். நீச்சல், நடத்தல் போன்ற உடற்பயிற்சிகளை செய்தல் தூக்கமின்மைக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது,

* ஒருவேளை நீங்கள் வயதானவர்களாக இருந்தால், மாலை வேளைகளில் மெதுவாக நடந்து பழகினால், இரவு நேர தூக்கத்திற்கு இது வழிவகுக்கும்.

மேலே குறிப்பிடப்பட்ட குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்க முடியும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top