புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுறா மீனின் கல்லீரலில் இருந்து மருந்துகள்: ஆய்வாளர்கள் தகவல்மனித உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை குணப்படுத்த விஞ்ஞானிகள் மருந்துகளை கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சுறா மீனின் கல்லீரலில் இருந்து பலவித மருந்துகள் தயாரிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர். ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் ஷஸ்லாப் என்பவர் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் நுண்ணுயிர் மற்றும் “ஸ்குயாலமின்” என்ற ரசாயன பொருட்கள் மனித உடலில் ஏற்படும் நோயை தடுக்க உதவுகின்றன.


இவற்றின் உதவியுடன் டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை நோய்கள், மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு புதிய வகையான மருந்துகள் தயாரிக்க முடியும் என ஆலோசித்தனர். இந்த நிலையில் சுறா மீனின் கல்லீரலில் நோய் எதிர்ப்பு சக்தியுடைய ஸ்குயாலமின் ரசாயன பொருள் இருப்பதை பரிசோதனையின் மூலம் அறிந்தனர். அதை தொடர்ந்து சுறாவின் கல்லீரலில் இருந்து மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்த மருந்து தயாரிக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இவை தவிர சுறா மீனின் வகையை சேர்ந்த மற்ற கடல்வாழ் உயிரினத்தில் இருந்தும் மருந்துகள் தயாரிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top