
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த பஸ்கள் அடுத்த மாதம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச்
சபையின் தலைவர் எம்.டீ.பந்துசேன குறிப்பிட்டார்.
பயணிகளின் நலன் கருதி எதிர்காலத்தில் பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தயாராகவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் ஊடாக பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதே இலங்கை போக்குவரத்து சபையின் எதிர்பார்ப்பாகும் எனவும் எம்.டீ.பந்துசேன கூறினார்.
அதன் பிரகாரம் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் 400 பஸ்களை இறக்குமதி செய்யவுள்ளாதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பஸ்களை நீண்டதூர போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைவர் எம்.டீ.பந்துசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்
0 கருத்து:
கருத்துரையிடுக