புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தோனேசியாவின் அழகிய சுற்றுலா தீவான பாலியில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. கட்டிடங்கள் இடிந்ததில் 50 பேர் படுகாயம் அடைந்தனர்.இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் குறித்து லண்டனில் வெளியாகும் தி டெலிகிராப் 
கூறியதாவது:

இந்தோனேசியாவின் சுற்றுலா தீவான பாலி தலைநகர் தென்பசார் நகருக்கு தெற்கே கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது. அதனால், பாலி தீவில் கடும் அதிர்வு ஏற்பட்டது. முக்கிய சுற்றுலா நகரான குடாவில் கட்டிடங்கள் குலுங்கின. சாலைகள் பிளந்தன. வீடுகள், வணிக நிறுவனங்களின் பொருட்கள் கீழே விழுந்து உருண்டோடின. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்ததில் 50 பேர் காயமடைந்தனர். 

எனினும், உயிரிழப்பு மற்றும் சேத மதிப்பு பற்றிய விவரம் மதிப்பிடப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவான பூகம்பத்துக்கு பிந்தைய அதிர்வுகள் நீடித்து வருகின்றன. இதனால், மீண்டும் பயங்கர பூகம்பம் ஏற்படலாம் என்று மக்களிடம் பீதி நிலவுகிறது. அவர்கள் வெட்டவெளியில் தங்கியுள்ளனர். இவ்வாறு தி டெலிகிராப் தெரிவித்தது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே கடலுக்கு அடியே 2004ல் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் சுனாமி ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top