புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

thumbnailபாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ., ஆப்கானிஸ்தானில் உள்ள ஜெர்மனி போலீஸ் முகாமின் தொலை பேசிகளை ஒட்டுக் கேட்டுள்ளது. மேலும், அம்முகாமின் கணினிகளுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து, ராணுவ ரகசி யங்களைத் திருடி, தலிபான்களுக்கு அளித்துள்ளது.


இதுகுறித்து, ஜெர்மனியில் இருந்து வெளிவரும், "பில்ட் டி' என்ற பத்திரிகையில் கூறப் பட்டிருப்பதாவது: ஆப்கா னிஸ் தானில், கடந்த 10 ஆண்டுகளாகத் தங்கியுள்ள, "நேட்டோ' படைக் குழுவில், ஜெர்மனிப் படைப் பிரிவுகளும் உள்ளன. இரு வாரங்களுக்கு முன், ஜெர்மனி அதிபர் கிறிஸ்டியன் உல்ப், ஆப்கானிஸ்தானுக்கு திடீரென பயணம் மேற் கொண்டார். அவரது ஆப்கன் வருகை, ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.,க்கு அவரது வருகை முன்கூட்டியே தெரிந்து விட்டது.உல்பின் ஆப்கன் வருகைக்கு முன்,ஜெர்மனி உளவுத் துறை பி.என்.டி., உள்துறை அமைச்சகத்துக்கு விடுத்த எச்சரிக்கையில்,ஆப்கனில் முகா மிட் டுள்ள ஜெர்மனி படைகளின் தொலைத்தொடர்பில், ஐ.எஸ்.ஐ., திருட்டுத்தனமாக நுழைந்து, ஜெர்மனி முகாமுக்கும் உள் துறை அமைச்சகத்துக்கும் இடையில் பரிமாறப்பட்ட தகவல்களைத் திருடியுள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

கடந்த 2002ல் இருந்து, ஆப்கன் போலீசாருக்குப் பயிற்சி அளித்து வரும் ஜெர்மனி போலீஸ் "புராஜக்ட்' குழுவின் ரகசி யத் தகவல்களையும் ஐ.எஸ்.ஐ., திருடியுள்ளதாக, பி.என்.டி., தெரிவித்தது.பி.என்.டி.,யின் எச்சரிக்கை, கடந்த 11ம் தேதி தங்களுக்கு வந்தது உண்மைதான் என, உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆப்கனின் காபூல்,மஜர் இ ஷரீப்,குண்டூஸ் மற்றும் பைஜாபாத் ஆகிய இடங்களில் உள்ள, 180 ஜெர்மனி போலீஸ் வீரர்கள் குறித்த தகவல்களை ஐ.எஸ்.ஐ.,திருடியுள்ளது.அவர்களின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்கள், உள் துறை அமைச் சகத் துக்கு அவர்கள் அளித்த அறிக்கைகள், அவர்களின் ராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றை, ஐ.எஸ்.ஐ., உளவு பார்த்துள்ளது.

இதில் இருந்து, இப்போதும் ஐ.எஸ்.ஐ., ராணுவ ரகசியங்களை, தலிபான்களுக்கு கடத்துகிறது என்பது தெளிவாகிறது.

மஜர் இ ஷரீப்புக்கு ஜெர்மனி அதிபர் உல்ப் வந்த போது, ஐ.எஸ். ஐ.,யின் உளவு வேலைகளை அவர் அறிந்திருக்க வில்லை. உளவு குறித்து, அவரிடம் தெரிவிக்க வேண்டாம் என, ஜெர்மனி உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்தது. ஆப்கனில் உள்ள ஜெர்மனி போலீஸ் முகாமில், பல கணினிகள் மெதுவாகச் செயல்பட்ட போது, அதன் காரணம் அறி வதற்காக, நிபுணர்கள் பரிசோதித்தனர். அப்போதுதான், ஐ.எஸ்.ஐ., கணினிகள் ஊடுருவியிருப்பது தெரியவந்தது.இவ்வாறு, "பில்ட் டி' பத்திரிகை தெரிவித்துள்ளது.


ஆப்கனின் காபூல், மஜர் இ ஷரீப், குண்டூஸ் மற்றும் பைஜாபாத் ஆகிய இடங்களில் உள்ள, 180 ஜெர்மனி போலீஸ் வீரர்கள் குறித்த தகவல்களை ஐ.எஸ்.ஐ., திருடியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top