புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தீபாவளி நெருங்க நெருங்க பஜார்களில் கூட்டம் அலை மோதுகிறது. ஜவுளி எடுத்து வெளியே வருவதற்குள் விழி பிதுங்குகிறது. குழந்தை குட்டிகளுடன் தீபாவளி பர்ச்சேஸ் முடிப்பது பெரும் பாடாக இருக்கிறது. இவ்வாறு அனுபவப்பட்டு
அலுத்துப் போனவர்கள்தான் பெரும்பாலும்
ஆன்லைனில் ஷாப்பிங்கை முடிக்கின்றனர். பேஸ்ட், பிரஷ், சோப், கேமரா, பீரோ, கட்டில்.. ஆகியவற்றை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்குவதில் பிரச்னை இல்லை. ஜவுளி? ஆயிரம்தான் டிஸ்பிளேயில் தெரிந்தாலும், முந்தானை உள்பட முழு புடவையின் டிசைனையும் பார்க்க முடிந்தாலும், புடவையை தொட்டுப் பார்த்து வாங்கினால்தான் பெண்களுக்கு திருப்தி.

ஆன்லைனில் எப்படி தொட்டுப் பார்த்து வாங்குவது?
சாத்தியம் என்கிறார் ஷரோன் பர்லே. லண்டனின் ப்ரூனல் பல்கலைக்கழகத்தில் டிசைனிங் துறையில் பேராசிரியராக இருக்கிறார். இவரது தலைமையில் டிசைனிங் மற்றும் இணையதள நிபுணர்கள் கொண்ட குழுவினர் ‘டிஜிட்டல் சென்சோரியா’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆராய்ச்சி பற்றி ஷரோன் கூறியதாவது:

அனிமேஷனில் ஒரு வகை ‘ஸ்டாப் மோஷன் அனிமேஷன்’. அதாவது, பொம்மைகளை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, ஒவ்வொரு பொசிஷனையும் படமெடுத்து, அதை படமாக ஓட்டுவது. இந்த டெக்னிக்கையும் தொடுதிரை (டச் ஸ்கிரீன்) தொழில்நுட்பத்தையும் இணைத்து புதுவித தொழில்நுட்பம் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். ஐபோன், ஐபேட், டேப்லட் கம்ப்யூட்டர்களின் டச் ஸ்கிரீன் உதவியுடன், நிஜத்தில் துணியை தொட்டுப் பார்ப்பதுபோன்ற உணர்வை பெற முடியும். அடிப்படை தொழில்நுட்பம் தயாராகிவிட்டது. அதை மேம்படுத்தி மெருகூட்டுவதற்கான ஆய்வு நடந்து வருகிறது. இவ்வாறு ஷரோன் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top