புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம், நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவின் மூலம் சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட
கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.

மேலும் இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு, அப்போலோ 17 என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களால் கொண்டு வர சந்திரனில் இருந்து எடுக்கப்பட்ட பாறை படிவங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். பல அதிர்ச்சி மிகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் கூறியதாவது, சந்திரனை பூமியில் இருந்து பார்த்தால் சாம்பல் நிறம் பூசியது போல தோற்றம் அளிக்கிறது. ஆனால் தகுந்த கருவிகளுடன் பார்த்தால், சந்திரன் பல நிறங்களில் ஒளிர்வது தெரியும்.

இதன்மூலம் சந்திரனில் பல வேதிப் பொருட்கள் உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. பூமியில் உள்ளதை விட, இரும்பு மற்றும் டைட்டானிய தாதுக்கள் சந்திரனில் அதிகளவில் காணப்படுகிறது. டைட்டானியம் என்பது இரும்பை விட உறுதியானது. ஆனால் எடை குறைந்தது. இதனால் அதிக விலை மிக்கதாக உள்ளது.

பூமியில் டைட்டானியம் மிக குறைந்த அளவில் அதாவது 1 சதவீதம் மட்டுமே காணலாம். தற்போதைய ஆராய்ச்சிகளின் மூலம் சந்திரனில் 10 சதவீதத்திற்கு மேலாக டைட்டானியம் உள்ளதாக தெரிகிறது. மேலும் சந்திரனில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட வாயுக்களும் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top