
வடமராட்சி பகுதியிலே பணியாற்றும் இவர் பெண்களுடன் பழகுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். விடுமுறை தினங்களிலும் கடமையில் ஈடுபடுபவர்.
அன்றைய தினமும் விடுமுறை. இவர் அலுவலகத்திற்கு செல்வதற்காக குளியல் அறையில் இருந்தவேளை இவரது தொலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது.
இதை பார்த்த மனைவி அலுவலக ஆண் உதவியாளர் ஏற்படுத்திய அழைப்பினை கண்டு தொலைபேசியை அழுத்தி அவுட் மைக்கில் வைத்த வண்ணம் கணவனிடம் வழங்கியிருந்தார்.கணவனும் அதை உணராது கலோ என்றதும் எதிர்முனையிலிருந்த ஆண் “அண்ணா அண்ணி வந்துட்டா நீங்கள் ஏன் தாமதம்” எனக் கேட்டது தான்.
அன்றிலிருந்து அப்பாவியாக இருந்த மனைவி முடுக்கிவிட்டார் கணவர் மேல் சித்திரைவதைகளை. இதை தாங்கமுடியாமலே கணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.தொலைபேசி சிலவேளைகளில் தொல்லைபேசியாக மாறுவதற்கு இதுவும் ஓர் உதாரணம்.
0 கருத்து:
கருத்துரையிடுக