புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பணம் வசூலிப்பதும்,மோசடிகளில் ஈடுபடுவதும் குறித்து பொதுமக்களால் முறையிடப்படுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் ஊழியர்களிடம் பொறுப்புணர்வுடனும், நம்பிக்கையுடனும் கடமையாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்.


பல கஸ்டங்களுக்கு மத்தியில் மூதூர், மணல்சேனை அகதி முகாமில் வாழும் அருமைத்துறை யோகேஸ்வரி எனும் பெண்மணி தனது மகள் தனுசிகாவை சத்திர சிகிச்சை செய்வதற்காக வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்.

பின்னர் தனியார் வைத்தியசாலையொன்றில் இரத்தம் அவசரமாக பரிசோதனை செய்யுமாறு வைத்தியர்களினால் அறிவுறுத்தப்பட்டது.

அகதி முகாமில் வாழ்ந்து வந்த அம்மாவுக்கு திருகோணமலையைப்பற்றி தெரியாது என அவரினால் தாதியர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது யாரிடமாவது கொடுத்து இரத்தத்தை பரிசோதிக்குமாறு தாதியர்களினால் அறிவுறுத்தப்பட்டது.

யாருமின்றி தவிக்கும் அம்மாவிடம் ஊழியர் ஒருவர் தான் வெளியில் சென்று பரிசோதனை செய்து வருகின்றேன். பரிசோதனை செய்ய 1500 ரூபாய் தேவையென சொன்னவுடன், சாப்பிட ஒரு ரூபாய் கூட இல்லாமல் தன்னிடம் இருந்த அனைத்துப் பணத்தையும் வழங்கியுள்ளார் அந்த அம்மா.

ஆனால் மேற்படி இரத்தப் பரிசோதனைக்கு 350 ரூபாயே தேவையாகவுள்ள போதும் இந்த ஊழியர் மனிதாபிமானமற்ற முறையில் 1500 ரூபாய் தேவை எனக் கூறி வாங்கிவிட்டு இரத்தப் பரிசோதனையும் செய்து கொடுக்காமல் இரக்க குணமற்ற அரக்கனாக நடந்து கொண்டுள்ளார்.


இது தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் இவ்வாறான ஊழியர்களை வைத்தியசாலையில் வைத்திருப்பது கவலையாக உள்ளது என மன வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மோசடியில் ஈடுபட்டவர் நஸார் என்றழைக்கப்படும் ஊழியர் இரவுக்கடமையில் மாத்திரம் கடமையாற்றுவதாகவும், பகல் நேரங்களில் தான் மூன்று நாட்களாக தேடி வருவதாகவும். தன்னிடம் வாங்கிய பணத்தை பெற்றுத்தருமாறும் பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top