புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் எய்சன்பர்க் தலைமையில் திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள், குழந்தை உள்ளவர்கள், இல்லாதவர்கள் என பல பிரிவுகளில் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களிடம் தகவல்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 10 ஆண்டுகள் நடந்த இந்த ஆய்வில்குழந்தையில்லாத ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஒரு குழந்தைக்கு தந்தையாக இருந்த சுமார் 92 சதவீதம் பேர், 62 வயது வரை இதய நோய் பாதிப்பு இல்லாமல் இருந்தனர். ஆய்வின் இடையில் சுமார் 3,082 பேர் மாரடைப்பால் இறந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தையில்லாதவர்கள்.

டெஸ்ட்ரோஸ்டோன் சுரப்பியில் ஏற்படும் பாதிப்பே இதற்கு காரணம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் இந்த சுரப்பியில் ஏற்படும் குறைபாடு என்பதால் இந்த நிலையை சரி செய்ய குழந்தை இல்லாதவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அவசியம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படும் இத்தகைய குறைபாடுகளை உரிய மருத்துவ சிகிச்சை மூலம் சரி செய்து இதய பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளமுடியும் என்ற உத்தரவாதமும் மருத்துவ தரப்பில் அளிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top