புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஈராக் மார்க்கெட்டில் 3 இடங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 19 பேர் உடல் சிதறி இறந்தனர். ஈராக்கில் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பின், நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை அமெரிக்கா தலைமையிலான படைகள் ஏற்றிருந்தன. டிசம்பர் இறுதிக்குள் ஈராக் ராணுவம், போலீசாரிடம் பாதுகாப்பு பொறுப்பை
ஒப்படைத்துவிட்டு படைகளை வாபஸ் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்க வீரர்கள் படிப்படியாக தாய்நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதற்கு சர்வதேச நாடுகள் அச்சம் தெரிவித்துள்னன. முக்கிய நகரான பாஸ்ராவில் மார்க்கெட் பகுதியில் நேற்று 3 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. முதல் 2 குண்டுகள் வெடித்த தகவல் அறிந்து ராணுவத்தினரும் போலீசாரும் மார்க்கெட்டுக்கு விரைந்து சென்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுக் கொண்டிருந்த போது 3வது குண்டு வெடித்தது. இதில் 19 பேர் உடல்சிதறி இறந்தனர். அவர்களில் பலர் ராணுவ வீரர்கள், போலீசார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top