புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

thumbnailலிபியா இடைக்கால அரசின் பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு ஆப்ரிக்க நாடான லிபியாவில் அதிபர் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து என்.டி.சி.எனப்படும் தேசிய இடைக்கால கவுன்சில் லிபியாவை தற்காலிகமாக ஆட்சி செய்து வருகிறது.
இந்நிலையில் இடைக்கால அரசின் பிரதமராக அப்துல் -அல்-ரஹீம் அல்-குயீப் , தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இடைக்கால கவுன்சில் உறுப்பினர் ஆவார். முன்னாள் அதிபர் கடாபி கடந்த 20-ம் தேதி கொல்லப்பட்ட பிறகு லிபியா
சுதந்திரநாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது இடைக்கால பிரதமராக இருந்து வந்த முகமது ஜப்ரில் பதவி விலகினார். புதிய பிரதமராக அப்துல் -அல்-ரஹீம் அல்குயீப் பொறுப்பேற்றார். இன்னும் 8 மாதங்களுக்குள் லிபியாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கு முன்பாகவே தேசிய அசம்பிளியான பாராளுமன்ற தேர்தலும் நடத்தப்படும் என என்.டி.சி. (தேசிய இடைக்கால கவுன்சில் )வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top