புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பேஸ்புக்கைப் பயன்படுத்தும் மில்லியன் கணக்கான பாவனையாளர்களுக்கான செய்தியே இது.ஆம், தற்போது பேஸ்புக்கில் ஹக்கர்கள் எனப்படும் இணைய புல்லுருவிகளின் தொல்லைகள் அதிகரித்து விட்டது.இணையத்தில் ஊடுருவும் ஹக்கர்கள் மில்லியன் கணக்கான மக்களின் சொந்த கணக்குகளினுள் சென்று அவர்களின் சுய
விவரங்களுக்குள் ஆபாசப் படங்கள், வன்முறைக் காட்சிகள் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தும் ஏராளமான பாவனையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் பேஸ்புக் நிறுவனத்தினருக்கு புதிய தலையிடி எழுந்துள்ளது. தங்களது கோடிக்கணக்கான பாவனையாளர்களை இத்தகைய இணைய புல்லுருவிகளிடம் இருந்து தற்காக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பேஸ்புக் நிறுவனம் வேகமாக முன்னெடுத்து வருகின்றது.

வித்தியாசமான, கவர்ச்சிகரமான பெயர்களில் வரும் வீடியோக்கள், குறுந்தகவல்கள், படங்களை திறந்து பார்க்க வேண்டாம் என தனது பாவனையாளர்களை பேஸ்புக் எச்சரித்துள்ளது.

பேஸ்புக் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதன் காரணமாகவும் ஆபாசப் படங்கள், வன்முறைக் காட்சிகள் போன்றவற்றை இணைய புல்லுருவிகள் பதிவிட்டு வருவதன் காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நண்பர்கள், உறவினர்களிடமிருந்து தங்களது கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்ள ஏராளமான பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது பேஸ்புக் கணக்குகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top