புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இங்கிலாந்து இளவரசர் பட்டத்தினை வில்லியம்ஸ் ஏற்கும் பட்சத்தில் தற்போதைய இளவரசர் சார்லஸ், ரோமேனியா நாட்டின் மன்னராக மகுடம்சூட இருப்பதாக மத்திய ஐரோப்பிய நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்தின் இளவரசரான சார்லஸ் , 64 , ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப் ஆகியோருக்கு பிறந்த
மூத்த மகன் ஆவார். சார்லஸிற்‌கு வில்லியம்ஸ், ஹாரி ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

வில்லியம்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் தனது பள்ளித்தோழி காதேமெடில்டென் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வில்லியம்ஸ் -மெடில்டென்னிற்கு குழந்தை பிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வில்லியம்ஸ் இளவரசராக பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டால், சார்லஸ் ரோமெனியா நாட்டின் மன்னராக பொறுப்பேற்க உள்ளார். இது குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன் சார்லஸ், டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், எனது மூதாதையர்கள் ரோமெனியாவின் வலாத்-இம்பிளேர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் எனவே அந்த வம்சத்தின் ரத்தவழியில் வந்தவன் என்பதால் ரோமெனியாவின் மன்னராக முடிசூட உரிமை உள்ளது என்றார். வலாத் இம்பிளேர் வம்சத்தினர் 15-ம் ‌நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள், ரோமெனியா வலாத் சாம்ராஜ்யத்தை ஐரோப்பிய வரலாற்றில் டிராகுலா என அழைப்பர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top