புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகிலேயே மிக உயரமான தொலைக்காட்சிக் கோபுரம் அமைத்து ஜப்பான் கின்னஸில் இடம் பிடித்தது. 634 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கோபுரம் டோக்கியோவில் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கான கின்னஸ் சான்றிதழ் டோபு டவரின் தலைவர் மிஸ்ஹியாகி சுசுகியிடம் கின்னஸ் வேர்ல்டு
ரெக்கார்டு தலைமைச் செயலர் அலிஸ்டர் ரிச்சர்ட்ஸ் வியாழக்கிழமை அளித்தார். இதன் மூலம் ஜப்பானுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகிற்கு தெரிய வந்துள்ளது. இந்த அங்கீகாரம் எங்களுக்கு மேலும் பலமாக அமையும். இதற்காகவே நாங்கள் முயன்றோம் என்று சுசுகி தெரிவித்தார்.

இதற்கு முன் சீனா 634 மீற்றர் உயரத்துக்கு கோபுரம் அமைத்ததுவே சாதனையாகவே இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.இந்தக் கோபுரம் அடுத்த வருடம் மே மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top