புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கல்லறைகளில் இருந்து 29 இளம்பெண்களின் உடல்களை திருடி, பொம்மைகள் போல அவற்றை அலங்கரித்து வீடு முழுக்க வைத்திருந்த ஆராய்ச்சியாளர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து உடல்கள் கைப்பற்றப்பட்டன. ரஷ்யாவில் வோல்கா ஆற்றை ஒட்டிய பகுதி
நிஸ்னி நோவ்கரட். இங்குள்ள கல்லறையில் மர்மமான முறையில் இளம்பெண்களின் உடல்கள் காணாமல் போவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. 
இதையடுத்து, அப்பகுதியை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். கைரேகைகள், கால் தடங்களை தடயவியல் வல்லுனர்கள் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதே பகுதியை சேர்ந்த ஒருவர் உடல் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சோபா, கட்டில், டிவி அருகே, புத்தக அலமாரி அருகே என பல இடங்களிலும் சடலங்களுக்கு மேக்கப் போட்டு வைக்கப்பட்டிருந்தன. பேஷன் ஷோக்களில் வருவது போல விதவிதமான தொப்பிகள், ஆடைகள் அந்த உடல்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு 29 உடல்கள் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் அனாடலி மாஸ்க்வின் (45) என்று மீடியாக்கள் தெரிவித்துள்ளன. வரலாற்று ஆய்வாளரான அவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top