
இந்நிலையில் ஐஸ்வர்யா கர்ப்பமானார். கடந்த ஜூன் மாதம் இந்த செய்தியை அவரது மாமனார் அமிதாப் பச்சன் டிவிட்டர் மூலம் மகிழ்ச்சியோடு அறிவித்தார்.
இதனையடுத்து ஐஸ்வர்யாவுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பது தொடர்பான செய்திகள் பரபரப்பாக வெளியிடப்பட்டு வந்தன. ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் எனவும் கூறப்பட்டது. இதனிடையே, இம்மாத 2வது வார வாக்கில் ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா பச்சன் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் அமைந்துள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் இன்று அதிகாலை பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையின் 7வது தளம் முழுவதும் ஐஸ்வர்யாவுக்காக முன்பதிவுக்காக செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் குடும்பத்தினர் இந்த தளத்தில் உள்ள அறைகளில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. ஐஸ்வர்யாவுக்கு இன்று எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக் பச்சன் டிவிட்டர் மூலம் அறிவித்தார்.
பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று அவர் டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். அதேபோல தான் தாத்தாவாகிவிட்டதை அமிதாப் பச்சன் மகிழ்ச்சியோடு டிவிட்டரில் அறிவித்துள்ளார். முன்னதாக அமிதாப்பச்சன் குழந்தை பிறப்பிற்கான எதிர்பார்ப்பு தொடர்பான டிவிட்டரில் தனது எண்ணத்தை பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக