புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக,


 பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பதவியா, அனுராதபுரம், கலன்பெந்துனுவெவ மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மாகோ, பாதுக்க மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் மூன்று பாதசாரிகள் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கிராந்துரு கோட்டே மற்றும் மாரவில் ஆகிய பிரதேசங்களில் அதிக வேகத்தில் வாகனங்கள் செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட விபத்துக்களில் இருவர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, வீதி ஒழுக்க விதிகளை மீறும் சாரதிகளை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெல்லவ மற்றும் குருணாகல் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த ரயிலில் குறித்த நபர் மோதியுள்ளார். நாரம்மல பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top