புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வாசகர்களை கவர கூகுள் பிளஸ் தளம் எண்ணற்ற மாற்றங்களையும் வசதிகளையும் வழங்கி கொண்டு உள்ளது. பேஸ்புக் தளத்தை விட உபயோகிப்பதற்கு எளிமையாகவும், வசதிகளையும் கூகுள் பிளஸ் தளம் கொண்டுள்ளது என்பது உண்மை.சமீபத்தில் புதிய வசதியாக கூகுள் பிளஸ் வட்டத்தில் உள்ள நண்பர்களிடம் Chat செய்யும் வசதியை கூகுள்
அறிமுகபடுத்தியது. அந்த வசதியின் மூலம் கூகுள் பிளஸ் வட்டத்தில் உள்ள அனைத்து நண்பர்களிடமும் ஜிமெயிலில் இருந்தே அரட்டை அடித்து மகிழலாம்.ஆனால் கூகுள் பிளசில் உள்ள அனைத்து நண்பர்களும் உங்கள் ஜிமெயில் சாட் பட்டியலில் வந்துவிடுவது பிரச்சினையாக உள்ளது பல பேர் கருதுகிறார்கள்.
ஜிமெயிலில் நுழைந்தாலே பெரும்பாலானவர்கள் chat செய்வதால் அவர்களுக்கு பதில் கூற முடியாமல் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளாவதாக எண்ணுகிறார்கள். ஆகவே இந்த வசதியை எப்படி ஜிமெயிலில் இருந்து நீக்குவது என பார்ப்போம்.
இதற்கு முதலில் கூகுள் பிளஸ் தளத்திற்கு செல்லுங்கள்.
அங்கு Chat பகுதிக்கு சென்று அங்கு உள்ள ஒரு சிறிய அம்பு குறியை கிளிக் செய்யவும்.
உங்களுக்கு ஒரு சிறிய மெனு உண்டாகும், அதில் உள்ள Privacy Settings என்ற வசதியை கிளிக் செய்யவும்.
Privacy Settings கொடுத்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.
அதில் Choose who can chat with you என்ற இடத்தில் உள்ள your circles என்பதை கிளிக் செய்து Custom என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
உங்கள் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் கூகுள் பிளசில் நீங்கள் உருவாக்கி வைத்துள்ள Circles காணப்படும்.
அதற்கு நேராக ஒரு சிறிய கட்டங்களில் டிக் மார்க் குறி காணப்படும்.
அதில் அனைத்து குறிகளையும் நீக்கி விட்டால் கூகுள் பிளசில் வட்டத்தில் உள்ள நண்பர்கள் உங்கள் ஜிமெயில் சாட் லிஸ்டில் இருந்து நீக்கப்படுவார்கள்.
குறிப்பிட்ட வட்டத்தில் உள்ள நண்பர்கள் மட்டும் சாட் செய்ய வேண்டுமென்றால் அந்த வட்டத்தை டிக் மார்க் செய்து கொள்ளுங்கள்.
கடைசியில் கீழே உள்ள Save பட்டனை கிளிக் செய்து விட்டு ஜிமெயில் வந்து சாட் லிஸ்டை பாருங்கள் கூகுள் பிளஸ் நண்பர்கள் நீங்கி இருப்பார்கள்.
நீங்கள் மின்னஞ்சல் மூலம் சேர்த்த நண்பர்கள் மட்டுமே மின்னஞ்சல் சாட் லிஸ்டில் இருப்பார்கள். ஒருவேளை நீங்கள் ஏதேனும் வட்டத்தை தெரிவு செய்து இருந்தால் அந்த நண்பர்களும் இருப்பார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top