புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கணணியில் இயங்குதளங்கள் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம்.

ஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது இயங்குதளமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்.
கணணியில் பல பணிகளை நிர்வாகம்(Management) செய்வது இயங்குதளமாகும். அவை
1. உள்ளீடு / வெளியீடு(Input/ Output).
2. நினைவகம் (Memory) மேலாண்மை.
3. பணி (Task) மேலாண்மை.
4. கோப்பு மேலாண்மை.
கீபோர்டு, மொனிட்டர், பிரின்டர் போன்ற வன்பொருள் உறுப்புக்களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது இயங்குதளமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, இயங்குதளம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மொனிட்டரில் வெளிப்படுத்துகிறது.
உங்கள் கணணியில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக இயங்குதளம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் மென்பொருள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விபரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள கோப்புகளை படிக்கும் பொழுது அதன் விபரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை இயங்குதளமே தீர்மானிக்கிறது.
பல இயங்குதளங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த இயங்குதளங்கள் உதவுகிறது.
ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம்(CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் இயங்குதளத்திற்குத் தெரியும்.
நீங்கள் உருவாக்கும் கோப்புகள் மற்றும் அப்ளிகேஷன்களுக்கான கோப்புகள் போன்றவற்றை இயங்குதளங்களே பராமரிக்கிறது. கோப்புகளை சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் இயங்குதளங்களே அவற்றை மேற்கொள்கிறது.
கோப்பைச் சேமிக்கும் பொழுது அதன் நேரம், திகதி ஆகியவற்றைக் குறிக்கிறது. கோப்பை படிக்க/மட்டும்(Read only), மறைக்க(Hidden), சிஸ்டம் என்ற பண்புகளை(Attributes) கோப்புகளுக்கு நீங்கள் கொடுக்கும் போது அவற்றை மேற்கொள்வதும் இயங்குதளமே.
படிக்க/மட்டும் என ஒதுக்கிய கோப்பில் மாற்றம் செய்ய விடாமல் தடுப்பது, அதே பெயரில் வேறொரு கோப்பில் சேமிக்க விடாமல் தடுப்பது எல்லாம் இயங்குதளங்களின் வேலை தான்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top