புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இலங்கையின் மூன்றாவது எண்ணெய் கிணறும் மன்னார் கடற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் அகழ்வுப் பணிகள் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும், இதிலிருந்து முதலில் காஸ் பெறப்படும் எனவும் கூறப்படுகிறது.மன்னார் கடற்படுகையில் 30 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த மூன்றாவது எண்ணெய்க் கிணற்றின் அகழ்வுப் பணிகள் இடம் பெறுவதாகவும் முதலாவது கிணற்றிற்கு சமீபமாக இந்தக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.

இதன் அகழ்வுப் பணிகளை இந்திய கெயார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அக்கம்பனி எண்ணெய் உள்ளதாக ஆய்வுகள் மூலம் இனங்காணப்பட்ட இடங்களில் இந்த அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.அவர்கள் இனங்கண்ட முதலாவது மற்றும் இரண்டாவது எண்ணெய் கிணறுகளின் அகழ்வுப் பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும் மேலும் கூறப்படுகிறது.

மூன்றாவது கிணற்றின் அகழ்வுப் பணிகள் பூர்த்தியடைந்ததன் பின்னர் ஏனைய கிணறுகளின் அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது. பெற்றோலிய வள அபிவிருத்திக் குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான லலித் வீரத்துங்கவின் கண்காணிப்பின் கீழ் எண்ணெய் கிணறுகள் பற்றிய அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

250 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் எண்ணெய் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்க ப்பட்டது.

ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு பல்வேறு துறையினர் இணைந்து வசதிகளை வழங்கி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top