புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் வழிமுறையை கர்நாடகாவைச் சேர்ந்த மாணவி கண்டறிந்து சாதனைபடைத்துள்ளார்.உத்தரகன்னடா மாவட்டம் கர்கி கிராமத்தை சேர்ந்த பெண் நாகரத்னா ஹெக்டே(26). இவரது பெற்றோர் அப்பள வியாபாரம் செய்து படிக்க வைத்தனர்.

கர்நாடகா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி வேதியியல் பட்டம் முடித்தபின் பெங்களூரில் உள்ள தைராய்டு மருந்து ஆராய்ச்சி மையத்தில், பேராசிரியர் முகேஷ் என்பவருக்கு உதவியாக பணியாற்றினார். அப்போது லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் சங்கர் பாலசுப்ரமணியன், நாகரத்னாவின் ஆராய்ச்சி ஆர்வம் குறித்து கேள்விபட்டார். தனது மேற்பார்வையில் மார்பக புற்றுநோய் மருந்து ஆராய்ச்சியில் ஈடுபடும்படி நாகரத்னாவிடம் கூறினார்.

‘தியாஸ்ட்ரெப்டன்’ என்ற இயற்கை மூலக்கூறு மூலம் மார்பக புற்று நோய் பரவுவதை தடுக்க முடியும் என கண்டுபிடித்து ஆய்வறிக்கை சமர்பித்தார். ‘நேச்சர் கெமிஸ்ட்ரி’ என்ற இதழில் வெளியான இந்த ஆய்வறிக்கை ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது குறித்து நாகரத்னாவின் ஆராய்ச் சிக்கு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் பாலசுப்ரமணியன் கூறுகையில், ‘‘நாகரத்னாவின் ஆராய்ச்சி மூலக்கூறு அமைப்பில் புதிய பாதையை ஏற்படுத்தியுள்ளது. இது மார்பக புற்றுநோய் சிகிச்சையில் இன்னும் பல கண்டுபிடிப்புகள் வெளிவர வழிவகுக்கும்’’ என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top