
இப்பகுதியில், நேற்று காலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு இடங்களில் இருந்து வந்த மீட்பு படையினர் பல மணி நேரம் போராடி, 15 பேர்களது உடல்களை வெளியே எடுத்தனர். இவ்விபத்தில், 25 பேர் பலியாகி இருப்பர் என்றும், 100க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் தெரிகிறது.
இவ்விபத்து குறித்து அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ கர்னல் லிண்டன் பனிசா கூறுகையில், ""அப்பகுதியில் 50 சிறிய குடில்களில் மக்கள் வசித்து வந்தனர். மேலும், 7,500 சதுர மீட்டர் பரப்பளவில் பொதுமக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது சம்பவம் நடந்துள்ளது. தங்க கனிம வளத்தை எடுக்க கோடரி, மண்வெட்டி போன்ற சாதாரணக் கருவிகளையே இவர்கள் பயன்படுத்தினர். இப்பகுதிக்கு 2 கி.மீ.,தொலைவில், கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில், 14 பேர் பலியாகினர். மேலும், 2009ல் நடந்த மற்றொரு நிலச்சரிவில், 26 பேர் பலியாகினர்,'' என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக