புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் ஆண்டுதோறும் சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டு, இப்போட்டியில் அதிகமான சிக்கன் லெக் பீஸ் சாப்பிடுபவருக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும்.சமீபத்தில் நடந்தேறிய இந்தாண்டிற்கான போட்டியை காண்பதற்கு 20
ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். மசாலா தடவப்பட்டு நன்றாக பொரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான லெக் பீஸ்கள் தயாராக இருந்த நிலையில் மணி ஒலித்து, போட்டி துவங்கியது.



இப்போட்டியின் இறுதியில் ஜப்பானைச் சேர்ந்த டகெரு கொபாயஷி என்ற இளைஞர் அரை மணி நேரத்தில் 337 லெக் பீஸ்களை சாப்பிட்டு பரிசைத் தட்டிச் சென்றார்.இதற்கு முன் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் 255 லெக் பீஸ்களை சாப்பிட்டு சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டகெரு கொபாயஷி முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top