புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் நேற்று அதிகாலை படுவேகமாக எஸ்.யு.வி. காரை ஓட்டிச் சென்ற பெண் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றியதில் கொத்தனார் ஒருவர் பலியானார். 4 பேர் காயமைடந்தனர்.கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பனஸ்வாடி, கல்யாண் நகரில் கட்டிடத் தொழிலாளர்கள் சாலையோரத்தில் நேற்று முன்தினம் இரவு படுத்துத் தூங்கினர். அதிகாலை 4 மணியளவில் வெள்ளை நிற டொயோட்டா பார்ச்சூனர் எஸ்.யு.வி. கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது.

அந்த கார் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. இதில் அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் கொத்தனாராக வேலை பார்த்த நாகராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மேலும் சிவயோகி, ஹனுமந்தப்பா, கௌடா, ரங்கப்பா ஆகியோர் காயமடைந்தனர்.இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த பெண் தன்னுடன் வந்த ஒருவருடன் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார். விசாரணையில் அந்த பெண்ணுடன் சென்றவரின் பெயர் ரவி என்று தெரிய வந்தது.

காயமடைந்த சிவயோகி போலீசாரிடம் கூறியதாவது : ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள் 5 பேரும் வழக்கமாக கட்டிட வேலை நடக்கும் இடத்தில் உள்ள டென்ட்டில் தான் தூங்குவோம். வெக்கை தாங்க முடியாமல் டென்டுக்கு முன்பு இருந்த நடைபாதையில் தூங்கினோம்.அதிகாலை 4 மணியவளவில் கார் சத்தம் கேட்டு கண்விழித்தோம் என்றார். அந்த கார் சாலையைவிட்டு நடைபாதையில் ஏறியது. நடப்பது என்னவென்று சுதாரிப்பதற்குள் அது நகாராஜ் மீது ஏறியது. மற்ற 4 பேர் தூக்கி வீசப்பட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top