புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அதிக எடை உள்ளவர்கள் தொடர்ச்சியாக நித்திரைக் குளிசை குடித்தால் அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆய்வாளர்களே இந்த அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளனர்.
40000 பேரை வைத்து நடாத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பொதுவாகவே அதிக எடை உள்ளவர்கள் எளிதாக நோய்த் தாக்கத்துக்கு உள்ளாவது வழக்கம்.அப்படியானவர்களின் உடலில் கொழுப்பு அதிகம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் போன்றவை தொடர்ச்சியாக தாக்கும்.இப்படியான நேரத்தில் நித்திரைக் குளிசையையும் குடிப்பது மேலும் சிக்கலை உண்டாக்கும்.

ஒரு வருடத்துக்கு பதினெட்டு அல்லது அதற்கு மேற்பட்ட நித்திரைக் குளிசைகள் உட்கொண்டால் இறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகக் காணப்படும்.பெண்களை விட இரண்டு மடங்கு கூடுதலாக ஆண்களுக்கே இந்தப் பாதிப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top