புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இணையத்தில் பெரும்பாலான நபர்கள் உபயோகிப்பது ஜிமெயில் தான். அதே போன்று கூகுள் பிளஸ் தளமும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.இவை இரண்டிலும் உள்ள ஒரு பொதுவான வசதி நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் chat வசதியாகும். இதுவரை இந்த
தளங்களுக்கு சென்று தான் அதில் ஓன்லைனில்
உள்ள நண்பர்களிடம் சாட் செய்து வந்தோம்.இனி நீங்கள் சாட் செய்ய அந்தந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. அந்த தளங்களை திறக்காமலே ஜிமெயில் மற்றும் கூகுள்+ நண்பர்களுடன் சாட் செய்யலாம்.
குரோம் பயனாளர்கள் மட்டுமே இந்த வசதியை பெற முடியும்.முதலில் கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்து Chat for Google என்ற நீட்சியை நீட்சியை தரவிறக்கம் செய்து உங்கள் உலவியில் நிறுவிக் கொள்ளுங்கள்.நீட்சி உங்கள் உலவியில் இணைந்தவுடன் குரோம் பார் அல்லது system tray பகுதியில் உள்ள ஐகானை க்ளிக் செய்யவும்.

நீங்கள் ஏற்கனவே ஏதேனும் கூகுள் கணக்கில் நுழைந்து இருந்தால் அந்த கணக்கில் உள்ள நண்பர்களை காட்டும். இல்லை எனில் கூகுள் கணக்கில் நுழைய Sign In வசதியை காட்டும்.அதில் நுழைந்து உங்கள் விருப்பமானவர்களுடன் அரட்டை அடித்து மகிழலாம். 


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top