புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் கட்டிட தொழிலாளியின் 8 வயது மகள், அங்குள்ள ஒரு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறாள். பெற்றோர் இருவரும் தினமும் கட்டிட வேலைக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு பிறகு தான் வீடு திரும்புவார்கள்.

கடந்த ஒருவாரமாக பள்ளி சென்று திரும்பிய மாணவி வீட்டில் சோர்வாக இருந்தாள். நேற்றும் இதுபோல சோர்ந்து படுத்திருந்தாள். இதுபற்றி அவளுடன் பள்ளி செல்லும் குழந்தைகளிடம் விசாரித்தபோது மாணவி பள்ளி சென்று திரும்பும்போது தினமும் அதே பகுதியில் உள்ள அந்தோணிசாமியின்(67) பர்னிச்சர் கடைக்கு செல்வார் என கூறி உள்ளனர்.

இதுபற்றி மகளிடம் பெற்றோர் விசாரித்தபோது, தினமும் அந்தோணிசாமி, பர்னிச்சர் கடைக்கு தன்னை அழைத்து 1 ரூபாய் தந்து தன்னிடம் தவறாக நடந்தார் என கூறி அழுதார். மகளுக்கு நேர்ந்த கொடூரம் அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்குப்பதிந்து அந்தோணிசாமியை கைது செய்து ஒரத்தநாடு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ரஸ்கின்ராஜ், அந்தோணிசாமியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மாணவியை, தஞ்சை குழந்தைகள் நல குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் சாலமன்ராஜா தலைமை யிலான குழுவினரிடம் ஒப்படைத்தனர். மனதளவிலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அங்கு கவுன்சலிங் கொடுத்து மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும். பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top