புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்ப்பாணத்தில் இவ்வருட முற்பகுதியில் மட்டும் 45 வரையான விபத்துக்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ் எண்ணிக்கையானது ஏனைய இடங்களில் ஏற்படும் விபத்துச் சம்பவங்களினை
விட மிகக் கூடுதலானதாகும் எனவும் தெரிவிக்கின்றனர்.தற்போது காணப்படும் விபத்து எண் ணிக்கைகளை விட அதிகரிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்பட்ட போது போக்குவரத்து பொலிஸாரின் சேவை மூலம் அவை குறைக் கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

வாகனப்பெருக்கம் எனக் கூறப்பட்டாலும் அதற்கு அப்பால் வாகனங்களினை செலுத்துவோர் வீதியில் போக்குவரத்து விதிகளினை கடைப்பிடிக்காமை காரணமாகவே தற்போது யாழில் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.

18 வயதிற்கு குறைந்த சிறுவர்களும் மோட்டார் சைக்கிளினை மிக வேகமாக செலுத்தி விபத்துக்குள்ளாகின்றனர்.இவை எல்லாவற்றி னையும் பொலிஸார் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அது முடியாத காரியம். சிறுபிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிளினை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் முதலில் இதனைச் சிந்திக்க வேண்டும். இவ்வீதிகள் சிறியனவாக காணப்படுகின்ற போதும் தலைக்கவசம், ஆசனப்பட்டி போன்றவற்றை அணியாமல் செல்லும் சந்தர்ப்பத்தில் ஏற்படும் விபத்துக்களின் பாதிப்புக்கள் பெரியதாகவே உள்ளன.

ஆசனப் பட்டி அணியாமல் செலுத்துபவர்கள் தற்போது அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஆசனப்பட்டி அணியா தவர்களுக்கான அபராதத் தொகையினை ஆயிரம் ரூபாவாக உயர்த்தியுள்ளது அரசு. அபராதத்தொகையினை செலுத்திவிட்டு மீண்டும் அதே தவறினை விடுவதனால் விபத்துக்கள் அதிகரிக்கவே செய்யும்.

விபத்துக்களில் இருந்து தம்மையும் பிறரையும் தவிர்க்கும் படியாக வாகன உரிமையாளர்கள் வாகனங்களினை செலுத்த வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top