புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இலங்கை ,இந்தியா போன்ற ஆசிய நாடுகளில், பிறந்த சிசு மற்றும் சில மாதங்களான குழந்தைகளைக் கொன்று குப்பைத்தொட்டில் வீசும் வழக்கம் உள்ளது. ஆனால் அப் பழக்கம் தற்போது பிரித்தானியாவையும் தொற்றிக்கொண்டது போலும். நேற்றையதினம்(02) பிரித்தானியாவின்
புறநகர்பகுதியான...

லிங்கஷியரில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டுக் குப்பைகளையும் கழிவுப் பொருட்களையும் ஒரு இடத்தில் சேகரித்து, பின்னர் அதில் உள்ள கழிவுகளைப் பிரித்தெடுப்பது வழக்கம். இதற்காக பாரிய நிலையங்கள் உள்ளது.

இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் சில கழிவுப் பொருட்கள் திரும்பவும் பாவனைக்கு உட்படுத்தப்படுகிறது. இவ்வாறானதொரு நிலையத்தில், கழிவுகள் பெல்ட்டில் கொட்டப்பட்டு அவை நகர்ந்துசெல்லும்போது பொருட்கள் பிரிக்கப்படுவது வழக்கம்.
இவ்வாறு பெல்ட்டில் ஒரு சுசுவின் உடலம் வந்துள்ளது. அது ஒரு பிளாஸ்டிக் விளையாட்டுப் பொம்மை என நினைத்த பணியாளர், அது அருகில் வந்தபோது உற்றுப்பார்த்துள்ளார். பின்னர் தான் அது ஒரு சிசுவின் உடல் என அவர் கண்டுகொண்டார்.

உடனே ஓடும் பெல்ட்டை நிறுத்தி விட்டு, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து புலனாய்வுப் பொலிசார் அவ்விடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்து 6 மாதமான இச் சிசுவை எவரோ கொண்டுவந்து, அங்கே எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர் எனக் கருதப்படுகிறது. கழிவுகளைப் பிரித்தெடுக்கும் தொழிலாழி இக் குழந்தையைக் கவனிக்காமல் விட்டிருந்தால் அவை எரியூட்டப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு எரியூட்டப்பட்டிருந்தால், இச் சிசு அடையாளம் தெரியாமல் எரிந்து சாம்பலாகியிருக்கும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top