புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தாய்லாந்தில் உள்ள பிபி தீவின் பாம்ஸ் விடுதியில், கனடாவைச் சேர்ந்த சகோதரிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இவர்கள் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள பொஹெனொகாமோக் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.


ஒருவர் பெயர் ஆட்ரி பிலாங்கர்(வயது 20), மற்றொரு நபர் நவோமி பிலாங்கர்(வயது 25). இவர்களின் மறைவை எண்ணி இந்த ஊர் மக்கள் முழுவதுமே அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

இந்தச் சகோதரிகளின் குடும்பத்தைச் சேர்ந்த ஏட்ரிலியன் பிலாங்கர் கூறுகையில், இவர்கள் தமது வாழ்க்கையை நேசித்து நன்றாக வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் இழப்பை விளக்க எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மரணம் குறித்து கமீலா ராஸ் என்பவர், இந்தப் பெண்களின் மரணத்திற்கு விஷத்தன்மை உடம்பில் கலந்தது தான் காரணமாகும். இவர்கள் இறந்து 12 முதல் 20 மணி நேரம் கழித்துத் தான் கண்டுபிடிக்கப்பட்டனர் என்றார்.

பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், இந்த பெண்களின் உடலில் காயம் எதுவும் தென்படவில்லை. வன்முறை நடந்ததற்கான தடயங்கள் இல்லை. ஆனால் சிராய்ப்பும், ஈறுகளில் ரத்தமும், நகங்கள் நீலநிறமாக மாறியிருந்தது என்றனர்.


எனவே இவர்கள் மூக்கு வழியாக விஷப்புகை அல்லது விஷக் காற்றை சுவாசித்திருக்கலாம் அல்லது அவர்கள் விஷத்தன்மை உடைய ஏதோ ஒன்றைக் குடித்திருக்கலாம் அல்லது சாப்பிட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 12ஆம் திகதி விடுதியில் வந்து தங்கிய இந்த பெண்கள், 15ஆம் திகதி வரை கதவை திறக்காததால் விடுதிப் பணியாளர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வந்து சோதனை செய்து பார்த்த போது, இருவரும் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றான தாய்லாந்திற்கு ஆண்டுக்கு 100,000 கனடா மக்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top