புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரான்சின் பாரிஸ் விமான நிலையத்திற்கு பர்தா அணிந்த படி வந்த கத்தார் நாட்டு பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படவே, அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி சென்றனர். பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி, பெண்கள் பர்தா அணியவோ, தலையை முக்காடிட்டு செல்லவோ
தடை விதித்தார்.

கடந்தாண்டு இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே கத்தார் நாட்டிலிருந்து மூன்று பெண்கள் பர்தா அணிந்த நிலையில் நேற்று முன்தினம், பாரிஸ் விமான நிலையம் வந்திறங்கினர்.

விமான நிலைய அதிகாரிகள் அவர்களது பர்தாவை விலக்கும்படி கூறினர். இதற்கு இந்த பெண்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பிரான்சில் நுழைய அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். இதன் காரணமாக இந்த பெண்கள் மூவரும் மீண்டும் கத்தாருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top