புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒரே நேரத்தில் 300 பேர் பயணம் செய்யும் அளவிற்கு வசதிகொண்ட உலகின் நீளமான பஸ் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.யங்மேன் ஜேஎனஅபி6250ஜி என்று பெயரிப்பட்டுள்ள இந்த பஸ் 25 மீட்டர் நீளம் கொண்டது. சாதாரண பஸ்களை விட 13 மீட்டர் அதிக நீளம் கொண்டது. ஏற்கனவே,
வால்வோ நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில்  அறிமுகப்படுத்தியிருக்கும் பஸ்களை விட இது நீளமானது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவின் தலைநகர் பீஜிங் மற்றும் ஹாங்கோ நகரங்களில் இயக்கப்படுகிறது.

பார்ப்பதற்கு மெட்ரோ ரயில் போல இருக்கும் இந்த பஸ் 3 பகுதிகளாக இணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் எளிதாக ஏறி இறங்க வசதியாக 5 வாசற்படிகள் இருக்கின்றன.

பஸ் ரொம்ப நீளமாக இருந்தாலும் 40 பேர் மட்டுமே உட்கார்ந்து செல்ல முடியும். மீதமுள்ளோர் மெட்ரோ ரயிலில் செல்வது போன்று நின்று கொண்டுதான் செல்ல‌ முடியும்.

மணிக்கு அதிகபட்சமாக இந்த பஸ் 80 கிமீ வேகத்தில் செல்லும். ஜெர்மனியை சேர்ந்த மேன் நிறுவனத்தின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

மேலும், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகளை சக்கர நாற்காலியி்ல் அமர வைத்து இந்த பஸ்சில் ஏற்றிச் செல்லும் வகையில் தாழ்தள படிகட்டுகளை கொண்டிருக்கிறது. பஸ் உட்புறத்திலும் சக்கர நாற்காலியை நிறுத்த தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

பெருகி வரும் மக்கள்தொகை பெருக்கத்தை சமாளிக்க இந்த புதிய பஸ் உதவும் என்று பீஜிங் மாநகர போக்குவரத்து துறை தெரிவிக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top