புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மத்திய பிரதேச மாநில தலைநகர் போபால் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராம்யாதவ் என்ற ஏழை விவசாயிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.இரண்டு குழந்தைகளும் உடல் ஒட்டிய நிலையில் பிறந்ததால் வைத்தியசாலையில் வைத்து
பராமரிக்கப்பட்டன.

இந்தியாவில் இதயம் ஒட்டிப்பிறந்த குழந்தைகளை பிரித்து மருத்துவர்கள் சாதனை!!(காணொளி)

இதில் ஒரு குழந்தைக்கு ஸ்டுட்டி என்றும் மற்றொரு குழந்தைக்கு ஆராதனா என்றும் பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளை தனித்தனியே பிரித்தெடுக்க முடிவு செய்யப்பட்டதையடுத்து கடந்த மாதம் 20-ம் திகதி, இதற்கான அறுவை சிகிச்சை நடந்தது.

22 டொக்டர்களை கொண்ட குழு அறுவை சிகிச்கை செய்து, இரண்டு குழந்தைகளையும் தனியே பிரித்தெடுத்தது.

இதில் ஆராதனாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த 2-ம் திகதி இரண்டு குழந்தைகளும் முதலாவது பிறந்த நாளை கொண்டாடின. மத்திய பிரதேச முதல்வரே நேரில் வந்து குழந்தைகளை வாழ்த்தினார்.

இந்நிலையில் நேற்று திடீரென ஆராதனா என்ற குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. அவளை காப்பாற்ற டொக்டர்கள் போராடினர்.

ஆனால் சிறிது நேரத்தில் ஆராதனா இந்த உலகை விட்டு பிரிந்தாள். இந்த மரணம் வைத்தியசாலை என அம்மாநிலம் முழுவதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top