புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பிறந்து இரு நாட்களான பெண் சிசுவின் சடலத்தை வீட்டின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் மீட்டிருக்கின்றனர்.குறித்த பகுதியில் பெற்றோரை இழந்த இளம்பெண் ஒருவரும், அவரது சகோதரனும் பேத்தியுடன்
வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், குறித்த இளம்பெண் கர்ப்பமுற்றுள்ள விடயம் கிராமத்திற்குப் பொறுப்பான குடும்ப நல உத்தியோகஸ்தருக்குத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த பெண்ணுக்கு அறிவுரை வழங்கப்பட்டு, குழந்தையை பாதுகாக்குமாறு அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் குறித்த பெண்ணின் நடமாட்டம் குறைவடைந்த நிலையில் அவர் குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிரசவ திகதி தெரியவந்த நிலையில் பெண்ணின் வீட்டை குடும்பநல உத்தியோகஸ்தர் கண்டுபிடித்து குழந்தை தொடர்பில் விசாரித்துள்ளார்.

எனினும்  அவர்களிடம் அந்தப் பெண் வயிற்றிலிருந்தது கட்டி எனவும், குழந்தை அல்ல எனவும் மறுத்துள்ளார்.

இதன்பின்னர் காவல்துறையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வீட்டின் பின்புறமாகவுள்ள பாழடைந்த வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த ஓடுகளுக்குள் இருந்து குழந்தையின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் குறித்த இளம் பெண்ணைக் கைதுசெய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top